வாய்ப்புக் கிடைக்காத விரக்தி.. அமெரிக்காவிற்கு படையெடுக்கும் இந்திய கிரிக்கெட் இளம் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்காக நிறைய புதுமுக கிரிக்கெட் வீரர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை, ஒரு சில வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடினாலும் அவர்கள் தங்களது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினால் தான் இந்திய அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இன்றுவரை கிரிக்கெட் விளையாட்டில் திறமைகள் பல இருந்தும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல், விரக்தியின் உச்சத்தில் பல வீரர்கள் இருக்கின்றனர். அப்படி வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் வேறு வழியில்லாமல் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேறு வழியை நாடிச் செல்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு வீரர், இந்திய அணியின் வருங்கால விராட் கோலி என்று பெயரெடுத்தவர். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தான் உன்முக் சந்த். அந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அபாரமாக விளையாடி, சதமடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்காக வென்று கொடுத்தார்.

Unmuk-Chand1-Cinemapettai.jpg
Unmuk-Chand1-Cinemapettai.jpg

இவருடன் 2012இல் இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல் தொடரிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை பெற்று தந்த இவருக்கு இன்று வரை இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உன்முக் சந்தை ஐபிஎல் போட்டிகளில் பல அணிகள் மாறி, மாறி ஏலம் எடுத்தும் அவருக்கு சரியான ஒரு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் பல போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டார். போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவித்து வந்தார்.

Unmuk-Chand-Cinemapettai.jpg
Unmuk-Chand-Cinemapettai.jpg

இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த வீரனான உன்முக் சந் இன்று, இந்தியாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட சென்றுவிட்டார்.

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களான ஸ்மித் பட்டேல், ஹர்மீத் சிங் ஆகியோர் போதிய வாய்ப்பு இல்லாமல் அமெரிக்க அணிக்காக விளையாடசென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Harmeet-singh-Cinemapettai.jpg
Harmeet-singh-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்