ஆடம்பரத்திற்கு அடிமையாகும் விளையாட்டு வீரர்கள். பல இலட்சங்கள் செலவழித்தும் கைகளை கடித்த புலிக்குட்டி.

பொதுவாக இந்தியாவை பொருத்தவரை விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிக மிக அதிகம். இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் விளையாடுவதற்காக வாங்கும் சம்பளமும், அதே போல் உலக கால்பந்து விளையாட்டு வீரர்கள் வாங்கும் சம்பளமும் கோடிக்கணக்கில் தான் இருக்கும். அப்படி அதிக அளவில் சம்பாதிக்கும் அவர்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகின்றனர். அப்படி கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்கள் செய்யும் ஆடம்பர செலவுகளை இதில் பார்க்கலாம்,

விராட் கோலி: இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கும் விராட்கோலி உலகத்தில் உள்ள காஸ்ட்லியான கைக்கடிகாரங்கள் அனைத்தையும் வாங்கி குவிக்கும் பழக்கம் கொண்டவர். அவரிடம் கிட்டத்தட்ட 50 கைக்கடிகாரங்களுக்கு மேல் உள்ளதாம். அதேபோல் அவர் குடிக்கும் பிளாக் வாட்டர் எனப்படும் மினரல் வாட்டர், ஒரு பாட்டில் 4 ஆயிரம் ரூபாயாம்.

Kholi-Cinemapettai.jpg
Kholi-Cinemapettai.jpg

நெய்மர்: பிரேசில் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், தான் சிரித்தால் தனது பல் வரிசை எடுப்பாக இல்லை என்று அதனை பல லட்சங்கள் கொடுத்து எடுப்பாக மாற்றியுள்ளார். ஆனால் இதனை அறிந்தவர்கள் இரண்டிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்று கலாய்த்து வருகின்றனர்.

Neymer-Cinemapettai.jpg
Neymer-Cinemapettai.jpg

ஹர்திக் பாண்டியா: இவரும் விராட் கோலியை போன்று ஒரு வாட்ச் பிரியர். சமீபத்தில் கூட 5 கோடிகளுக்கு துபாயில் இருந்து கைக்கடிகாரங்கள் வாங்கினார் என்று சர்ச்சையானது. இவர் நைட் பேண்ட் எனப்படும், இரவில் அணியக்கூடிய ஆடைகளுக்கு மட்டும் பல இலட்சங்களை செலவழித்து வருகிறாராம்.

hardik-Cinemapettai.jpg
hardik-Cinemapettai.jpg

லியோனல் மெஸ்ஸி: மெஸ்ஸி தனது வீட்டின் அருகே உள்ள வீட்டையும் வாங்கியுள்ளார். இரவில் அவர்கள் வீட்டிலிருந்து அதிகமாக சத்தம் வருகிறது என்ற காரணத்தினால், அந்த வீட்டின் மதிப்பை விட பல மடங்கு கொடுத்து அதை வாங்கியுள்ளார். இன்றுவரை அந்த வீட்டை சும்மாதான் வைத்துள்ளார்.

Messi-Cinemapettai.jpg
Messi-Cinemapettai.jpg

கிறிஸ்டியானோ ரொனால்டோ: போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ பலநூறு ஆடம்பர கார்களை தனது சொகுசான வாழ்விற்காக வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி வெட்டிச்செலவாக தனது குழந்தை பிறந்த நாளிற்காக பல கோடி ரூபாய் செலவில் மது பானங்கள் வாங்கி விழாவை சிறப்பித்துள்ளார்.

Ronaldo-Cinemapettai.jpg
Ronaldo-Cinemapettai.jpg

மைக் டைசன்: குத்துச்சண்டை வீரரான இவர் இரண்டு புலி குட்டிகளை வளர்த்துள்ளார். ஒருநாளைக்கு மூன்று லட்சத்திற்கு மேல் அதற்காக செலவழித்துள்ளார். நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரவே, அவர் கைகளை பதம் பார்த்தது புலிக்குட்டி. அதன்பின் வருத்தத்துடன் அதனை காப்பகத்திற்கு அனுப்பி உள்ளார்.

Tyson-Cinemapettai.jpg
Tyson-Cinemapettai.jpg