நம்பர் ஒன் அணிக்கு எதிராக 300 அடித்தும் வாய்ப்பு தர மாட்றாங்க.. ரகானேவால் ஏழு ஆண்டுகளாக கதறும் வீரர்

நல்ல திறமைகள் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் பல வீரர்கள் அணியில் இடம் கிடைக்காமல் காத்து கிடக்கிறார்கள். அப்படித்தான் 26 வயதில் விளையாடி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆன பிறகும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார் வீரர் ஒருவர். இப்பொழுது அவருக்கு 32 வயதாகிவிட்டது.

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய அறிமுக போட்டியில் களம் இறங்கினார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அந்த அணிக்கு எதிராக 303 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போட்டியில் கே எல் ராகுலும் 199 ரன்கள் விலாசினார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்கள் அடித்தது. அதன் பின் இந்திய அணி கருண் நாயர் மற்றும் கே எல் ராகுல் உதவியால் 759 ரன்கள் குவித்தது. 381 பந்துகளை சந்தித்து 32 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 303 ரன்கள் குவித்தார் நாயர். இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரண்களில் வென்றது.

ரகானேவால் ஏழு ஆண்டுகளாக கதறும் வீரர்

அதன் பின் கருண் நாயர் விளையாடிய போட்டிகளில் சோபிக்கவில்லை. மொத்தமா இவர் ஆறு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறார். மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 74 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

அதே நேரத்தில் இவருக்கு மாற்று வீரராக வந்த ரகானே தன்னுடைய முழு திறமையையும் காட்டி தொடர்ந்து ரண்களை குவித்து வந்தார்.இதனால் கருண் நாயர் இடம் பறிபோனது. இப்பொழுது மீண்டும் நன்றாக விளையாடி தன்னுடைய 32வது வயதில் அணிக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நாயர்.

Next Story

- Advertisement -