Sports | விளையாட்டு
தோனி வீட்டிற்கு செல்லும் நிலை வந்துவிட்டது! பிரபல கிரிக்கெட் வீரர் எச்சரிக்கை
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் முதலிய ஆறு அணிகள் விளையாடிய ஆசியக் கோப்பை போட்டி முடிவடைந்தது. இந்தியா கோப்பையை வென்றது என்றாலும் இந்தத் தொடரில் இந்தியா பல சோதனைகளை தான் சந்தித்தது, சிறு தவறினால் ஆசிய கோப்பை தவறிப் போயிருக்கும் இருந்தாலும் கடைசியில் பெரும் முயற்சியில் வென்றுவிட்டது.

Venkatesh Prasad
ஏழாவது முறையாக கோப்பையை வென்றார் இந்த வெற்றியை அளிக்கவில்லை விராட் கோலி இந்த போட்டியில் பங்கேற்க வில்லை. சீனியர் இத தான தோனி ஆலோசனைகளை வழங்கி வந்தார். கீப்பிங்கில் புது சாதனை படைத்தார், மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங், இந்த பவுலர்களை வழிநடத்தியது, டி.ஆர்.எஸ்., அறிவுரை, ஆலோசகர் என டோனி டீம் ஆகவே விளையாடியது.
ஆனால் பேட்டிங்கில் தோனி பெரிய அளவில் சாதிக்க வில்லை. நிறைய வாய்ப்புகளை அவர் வீணடித்து விட்டார். இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில்; இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் இன்னும் சரியாக இல்லை.
குறிப்பாக 4 மற்றும் 6 வது இடத்தில் எந்த பேட்ஸ்மேனும் கெட்டியாக பிடித்துக்கொள்ளும் அளவு இல்லை. தோனி, தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அவரின் வயதுக்கு விரைவில் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்படும். ஏன் என்றால், இளம் வீரர் பண்ட் அவர் இடத்தை பிடிக்க தயாராக காத்துக்கொண்டுள்ளார். ஆனால் கீப்பிங் நுணுக்கத்தில் தோனி தான் எப்போது கில்லி.’ என்றார்.
