கொல்கத்தா: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, மரியாதை கொடுக்க வேஎண்டுமெ என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி, அதிரடியாக நீக்கப்பட்டார்.

 

பின் இந்த ஆண்டுக்கான போட்டிகள் துவங்கியது முதல், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயின்காவின் சகோதரர், ஹர்ஸ் கோயின்கா டுவிட்டரில் தோனியை குத்திக்காட்டுவது போல பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தோனியின் செயல்பாடும் இத்தொடரில் தொடர்ந்து மோசமாகவே உள்ளது. அதனால் அவருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தோனிக்கு ஆதரவு சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

இதுகுறித்து ரெய்னா கூறுகையில்,’
முன்னாள் கேப்டன் தோனியை பற்றிய விமர்சனங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கடுமையாக உழைத்துள்ளார். அதை நான் சொல்லி அனைவரும் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதனால் அவருக்கு மரியாதை அளிப்பது நமது கடமையாகும். ஒரு வீரர் தனது சோதனை காலத்தில் தனக்கு ஆதரவான வார்த்தைகளை கேட்க விடும்புவார். ஆனால் தோனி தனக்கு எதிராக வரும் கடுமையான விமர்சனங்களை எப்படி பொறுத்துக்கொள்கிறார் என தெரியவில்லை. அவருடன் சேர்ந்து மீண்டும் மஞ்சள் சட்டையில் எப்போது விளையாடுவோம் என ஆர்வமாக உள்ளது. ’ என்றார்.