fbpx
Connect with us

Cinemapettai

பிரம்மாண்ட படத்தில் இணையும் அசுரன் டிஜே.. இதிலும் வெயிட்டான கேரக்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரம்மாண்ட படத்தில் இணையும் அசுரன் டிஜே.. இதிலும் வெயிட்டான கேரக்டர்

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் உலகமெங்கும் வசூலில் சக்கைப்போடு போட்டது. பார்ப்பதற்கு பையன் போல இருக்கும் தனுஷ் இந்த படத்தில் இரண்டு மகன்களுக்கு அப்பாவாக நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தார்.

இந்த படத்தில் நடித்த அனைவரின் கேரக்டர்களும் தனித்துவமாக இருந்ததே இந்த படத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் தனுசுக்கு அடுத்து அனைவரையும் கவர்ந்தவர் ஈழத் தமிழ் பாடகர் டிஜே.

இவர் ஒரு இண்டிபெண்டன்ட் பாடகர். படத்தில் நடிப்பதற்கு முன்பே இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். மேலும் அசுரன் படத்தில் இவருக்கு கிடைத்த கேரக்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்ததால் தற்போது அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அந்தவகையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் டிஜே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விக்ரமை குறிப்பிடவில்லை என்றாலும் ஆக்ஷன் திரில்லர் மற்றும் ஆர் ரகுமான் இசை என குறிப்பு கொடுத்திருந்தார்.

இதற்காக இரண்டு மாதம் தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார், டிசம்பர் மாதம் சூட்டிங் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top