Connect with us
Cinemapettai

Cinemapettai

suresh-archana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பத்திரகாளியாக மாறின அர்ச்சனா.. மிதி வாங்கின மொட்ட அங்கிள்.. எம்மாடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடர்ச்சியாக 4 மணிநேரம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், விளையாட்டுக்கள், வண்ணம் தீட்டுதல், சமையல் போட்டி போன்ற பல நிகழ்வுகள் நடந்தேறின.

மேலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கிராமம், நகரம் என இரு குழுக்களாக பிரிந்து இந்த போட்டிகளில் பங்கு பெற்றனர். இந்த நிலையில்  நேற்றைய நிகழ்ச்சியில் கிராமத்தார் அசுரவதம் நாடகத்தை நடித்து ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளனர்.

அதாவது நகரம் குழு சமையல் போட்டி, விளையாட்டு போட்டி ஆகிய இரண்டிலும் வெற்றியை கண்டது. இதனால் வெறித்தனமாக மூன்றாவது போட்டியில் களமிறங்கிய கிராமத்து அணி வேற லெவலில் சரஸ்வதி சபதம் நாடகத்தை போட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களையும் சேர்த்து மிரள வைத்தனர்.

மேலும் நகரத்து அணி பிக்பாஸ் நிகழ்ச்சியையே  ட்ரோல் செய்து நாடகம் போட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெறித்தனமாக களமிறங்கிய கிராமத்து அணியில் ரியோ நாரதர் ஆகவும், அர்ச்சனா பார்வதியாகவும், சம்யுக்தா லட்சுமியாகவும், கேபி சரஸ்வதியாகவும், ஆரி சிவனாகவும், மொட்ட அரக்கனாகவும் வேஷம் போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டாங்க.

மேலும் அசுரன அழிக்கிற காட்சியில் அர்ச்சனா முகமெல்லாம் மஞ்சள் பூசி  மங்காத்தாவாவே மாறிட்டாங்க. இதனைத் தொடர்ந்து அரக்கன அழிக்கும் காட்சியில் சுரேசை வதம் பண்ணி, வயித்துலயே மிதிச்சு நாடகத்தையே தெறிக்க விட்டுட்டாங்க அர்ச்சனா.

எனவே, அர்ச்சனா மிதிக்க தாராளமாக தன்னோட வயித்த கொடுத்த  சுரேஷுக்கு பாராட்டுகளை குவிந்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

Continue Reading
To Top