Tamil Nadu | தமிழ் நாடு
தொடர்வண்டியில் பயணம் செய்ய பிளாட்பார்ம் டிக்கெட் போதுமாம்.. இனி புக்கிங் செய்ய வேண்டிய அவசியமில்லை!
தொலை தூர பயணம் மேற்கொள்பவர்களும், வசதியான பயணம் மேற்கொள்பவர்களும் விரும்புவது ரயில் பயணத்தை தான். இதற்காக மக்கள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர்.
இந்த முன்பதிவு டிக்கெட் முன்பதிவு மையம், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆகிய இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. சில சமயங்களில் திடீரென பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது மக்கள் தக்கல் முறையில் டிக்கெட் புக் செய்து தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.
ஆனால் தற்போது பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வைத்து கூட மக்கள் ரயில்களில் பயணிக்க முடியும் என்ற சுவாரஸ்யமான செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது. இதைப் பற்றி இங்கு காண்போம்.
அதாவது ஒருவர் பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு ரயிலில் ஏறிவிட்டால் பயப்படாமல், அந்த டிக்கெட் செக்கரிடம் சென்று காட்டிவிட்டு பயணத்திற்கான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு ரயில்வேயில் ஒரு விதி உள்ளது என்றும் கூறுகின்றனர் ரயில்வே துறையினர்.
அதாவது அவசர காலத்தில் ஒரு பயணி பிளாட்பார்ம் டிக்கெட்டை வைத்துக்கொண்டு மட்டுமே இரயிலில் ஏறலாம். ஆனால் அவ்வாறு ஏறியவுடன் அவர்கள் உடனடியாக TTE- ஐ தொடர்பு கொண்டு செல்லும் இடத்திற்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே விதி கூறுகிறது.
மேலும் இத்தகைய சூழலில் பயணிகளிடம் இருந்து 250 ரூபாய் அபராதமும் மற்றும் பயண கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எனவே, பிளாட்பார்ம் டிக்கெட் மூலம், சில விதிகளின் அடிப்படையில் முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
