Tamil Cinema News | சினிமா செய்திகள்
மோடியை கொல்ல திட்டம்.! இலங்கையில் நடக்க இருந்த விபரீதம்.. பகீர் தகவல்..
இலங்கை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பல மர்மநபர்கள் பின் தொடர்ந்ததாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 12ம் திகதி ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்தின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் மற்றும் பெண்ணொருவர் உள்நுழைய முற்பட்ட போதும், அது பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளது. பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குள் முஸ்லிம் நபர் ஒருவர் கத்தரிகோலுடன் உள்நுழைய முயற்சித்தார் என கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதன்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர் முஸ்லிம் மத தலைவர் போல் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளார். இந்த நபர் நரேந்திர மோடி கலந்துக் கொண்ட கூட்டத்தில், சீன பிரதிநிதி ஒருவர் செல்லும் அனுமதி அட்டையுடன் செல்ல முயற்சித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இந்த நபரின் மகள் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றைய தினம் பெண் ஒருவரும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
