fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்திசுரேஷையும் கடத்த திட்டமிட்டான் பல்சர் சுனில்-பாவனா சம்பவ குற்றவாளி!

keerthy suresh

News | செய்திகள்

கீர்த்திசுரேஷையும் கடத்த திட்டமிட்டான் பல்சர் சுனில்-பாவனா சம்பவ குற்றவாளி!

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த கார் ட்ரைவர் சுனில், அப்போது எடுத்த புகைப்படம், வீடியோக்களை காட்டி பாவனாவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

இதே போலவே கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டது இப்போது தெரிய வந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், 80 களில் பெரிய நடிகையாக இருந்த மேனகாவின் மகள். அத்தோடு மலையாள திரையுலகில் தயாரிப்பாளராக இருக்கும் சுரேஷின் மகளும் கூட.

கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயமோ’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி, `ரஜினிமுருகன்’, `ரெமோ’, `தொடரி’, `பைரவா’ என்று பல வெற்றி படங்களின் நாயகியாக இருந்ததால், பாவனாவிடம் வேலைக்கு இருந்தபோதே கீர்த்தி சுரேஷின் டிரைவரிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவரை கடத்த திட்டம் போட்டுள்ளான்.

கீர்த்தி தனியாக காரில் எப்போது போவார் என்று டிரைவர் சொல்லுவதற்கு கோட் வேர்ட் ஏற்படுத்தி இருக்கிறான். தனியாக சென்று கீர்த்தியை கடத்த முடியும் என்றால் y என்று கீர்த்தியின் ட்ரைவர் மெசேஜ் செய்யவேண்டும்.இல்லையென்றால் x செய்தி அனுப்பவேண்டும்.

ஒருநாள் கீர்த்தி ட்ரைவர் தவறுதலாக y என்ற செய்தி அனுப்ப, பல்சர் சுனில் வந்து காரை மடக்கி கடத்தினால், உள்ளே மேனகா இருந்து இருக்கிறார். அவரை பாலியல் கொடுமை செய்து வீடியோ எடுத்தால் ஒன்னும் தேறாது என்று அப்படியே அவரை விட்டுவிட்டு போய்விட்டானாம்.

குடும்ப கவுரவத்தினால் வெளியே இதுவரை செல்லாதவர்கள், இப்போது வெளிப்படையாக சொல்லி உள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top