ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் தொலை தொடர்பு நிறுவங்கள் வழங்கிவரும் சேவைக்கான கட்டணங்கள் பல மடங்கு குறைந்துள்ளது. ஜியோவோடு போட்டி போடும் முனைப்பில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஜியோவின் டண் டணா டண் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்-இன் 349, 339 மற்றும் 395 புதிய திட்டங்களின் படி அதிக இணைய டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.339க்கு ரீசாஜ் செய்தால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2ஜிபி டேட்டாவிற்கு பதில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

ரூ.349-க்கு ரீசாஜ் செய்தால் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.395 -க்கு ரீசார்ஜ் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 3000 நிமிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு 1800 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 71 நாட்கள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here