நடிகர் சங்கத்திற்கு கட்டம் கட்ட நிதி திரட்டி வரும் நடிகர் சங்கம்,சமிபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரபல நடிகர்களை ஒரு புதிய படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க வைத்து அதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு, நடிகர் சங்கத்துக்கான படம் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

தற்போது இரண்டு படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் படத்தில் விஷாலும், கார்த்தியும் இணைந்து நடிக்கிறார்கள். இரண்டாவது படத்தில் ஜெயம்ரவியும், ஆர்யாவும் நடிக்கின்றனர்.