ரெய்னாவுக்கு அடித்த ஜாக்பாட்.. 2021 ஐபிஎல் ரணகளம் தான் போல!

சிஎஸ்கே அணியுடனான கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் ரெய்னா அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். அவர் இந்த சீசன் ஐபிஎல் இல் இருந்து விலகினார்.

ஆனால் ரெய்னா ஐபிஎல் போட்டிகள் துவங்கும் முன், சிஎஸ்கே அணியுடன் இணைய ஆவலாக உள்ளதாக சமாதானம் செய்ய முயற்சி செய்தார். சிஎஸ்கே அணி அவரை கடைசிவர அழைக்காமல் தவிக்க விட்டது.

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் ரன் மெஷின் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியாதது ஏலத்தில் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி வாங்காவிட்டாலும், வேறு அணிகள் அவரது ஐபிஎல் அனுபவத்துக்காக தங்கள் அணியில் தேர்வு செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

2021 ஐபிஎல் தொடரில் பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ. 2020 ஐபிஎல் தொடர் பெரிய வெற்றி பெற்றாலும், கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார சரிவினால் அதிக லாபம் ஈட்ட வில்லை.

அதை ஈடுகட்டும் விதமாக புதிய ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்றும், அந்த அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் நிலவி வருகின்றன.

சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்ட போது குஜராத் லயன்ஸ் என்ற அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக பதவி வகித்தார். அதனால் அவருக்கு கேப்டன் அனுபவம் புதிதல்ல என்பதையும் தெரிவிக்கின்றனர்.

csk-team
csk-team