ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஹாலிவுட் ஸ்டைலில் உறைய வைக்கும் திகில் காட்சிகளுடன் வெளியான பீட்சா 3 டீசர்.. செம த்ரில் ப்பா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பீட்சா. விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிப்பில் பீட்சா 2 படம் உருவானது. ஆனால் தியேட்டரில் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இருந்தாலும் பீட்சா 2 திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல லாபம் கொடுத்த திரைப்படமாக மாறியதை தயாரிப்பாளர் சிவி குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது அதனை தொடர்ந்து பீட்சா 3 த மம்மி என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். முதல் பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் இரண்டாம் பாகத்தில் அசோக் செல்வன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது பீட்சா படத்தின் மூன்றாவது பாகத்தில் பிரபல நடிகர் அஸ்வின் குமார் என்பவர் நடித்துள்ளார். இவர் தல அஜித் நடித்த வேதாளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் ஸ்டைலில் பரபரக்கும் திகில் காட்சிகளுடன் உருவாகியுள்ள பீட்சா 3 டீசர் இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது.

- Advertisement -

Trending News