Connect with us

Cinemapettai

பியூஸ் மானுஷ் உயிருக்கு ஆபத்தா? ஸ்டாலின் கடும் கண்டனம்

piyush-stalin

Politics | அரசியல்

பியூஸ் மானுஷ் உயிருக்கு ஆபத்தா? ஸ்டாலின் கடும் கண்டனம்

நேற்றைய தினம் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பாஜகவினர் தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வு பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது, காவல்துறையினர் இருந்தும் அவர் தாக்கப்பட்டது மற்ற சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் பல அரசியல் பிரபலங்களும் பியூஸ் மானுஷ் நடந்தது சட்ட விரோதம் என்று கூறிவருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் கூறுகையில் சமூக ஆர்வலர்களிடம் ஒரு பயத்தை உருவாக்குவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இதனை நினைவுபடுத்தி உள்ள மு.க.ஸ்டாலின் மற்ற சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரபலங்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலத்தில் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் இதுபோன்ற மனிதர்களை தாக்கும் அரசியல்வாதிகளை தண்டிக்கப்பட வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top