fbpx
Connect with us

Cinemapettai

பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.!

bala-vikram

News | செய்திகள்

பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.!

vikram: பிதாமகன் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.!

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன அதில் அனைத்து படங்களும் வெற்றி அடைகின்றன என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூறவேண்டும்,  ஆனால் ஒரு சில இயக்குனர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கும் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைகின்றன.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெற்றி அடைந்த திரைப்படங்களின் லிஸ்டில் விக்ரம் நடித்த பிதாமகன் திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.

பிதாமகன் படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது,  இது போலவும் நடிக்க முடியுமா என்று பலரை ஆச்சரியப்பட வைத்தது, அப்படியிருக்க  சில பிரச்சனைகளால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக, விக்ரம் படப்பிடிப்பு பாதியிலேயே கூறினாராம்.

அதனால் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் முரளி நடிக்கவைக்க  இயக்குனர் பாலாவும் முன்வந்தார், ஆனால் தயாரிப்பாளர் இந்த கதாபாத்திரத்திற்கு விக்ரம்தான் நடித்தாக வேண்டும் அவர் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என கூறினார் என்று பிரபல யூட்யூப் சேனலில் ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி கொடுத்துள்ளார்.

Murali

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top