Connect with us
Cinemapettai

Cinemapettai

mysskin-pisasu-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சைக்கோ பட வெற்றியை தலைக்கு ஏற்றிய மிஸ்கின்.. அடுத்த படத்தின் பாதி பட்ஜெட்டை சம்பளமாக கேட்டு அடம்

பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தினால் உயிரிழந்த பெண், பேயாக வந்து ஆட்டிப்படைக்கும் இந்தப் படத்தின் கதை ரசிகர் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

மிஸ்கின் என்றாலே இரவு நேரங்களில் படப்பிடிப்பை நடத்தி ரசிகர்களை நடுநடுங்க வைப்பார். தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார், அதுமட்டுமில்லாமல் படத்தின் தலைப்பை விட்டுக் கொடுத்ததற்காக இயக்குனர் பாலாவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார் மிஸ்கின்.

படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிஸ்கினுக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம், அதுமட்டுமில்லாமல் நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஒரு கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுக்கு இசை அமைப்பதற்காக ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆகமொத்தத்தில் 8 கோடி சம்பளத்திற்கு போய்விட்டதாம்.

இதனை அடுத்து பேய் படம் என்றாலே கிராபிக்ஸ் தான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது இதற்காக 3 கோடி செலவு, மற்ற செலவுகள் என்று பார்த்து பார்த்தால் அது ஒரு நான்கு கோடி.

மொத்தத்தில் இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 15 கோடி வரை திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிட சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு படத்தை வெறும் 3 கோடி பட்ஜெட்டில் இயக்கியிருந்தார் மிஸ்கின்.

பிசாசு படத்தை இயக்கிய மொத்த பட்ஜெட் ஆன மூன்று கோடியை சைக்கோ படத்தில் மிஸ்கின் சம்பளமாக வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top