fbpx
Connect with us

Cinemapettai

இளையராஜா கிடையாது, சைக்கோ வில்லன் உண்டு! மிஷ்கினின் பிசாசு 2 அதிகாரபூர்வ அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளையராஜா கிடையாது, சைக்கோ வில்லன் உண்டு! மிஷ்கினின் பிசாசு 2 அதிகாரபூர்வ அப்டேட்

சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் மிஷ்கின். இயக்கம் மட்டுமன்றி சில நாட்களாக நடிப்பிலும் கலக்கி வருகிறார். இதோடு அல்லாமல் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துவிட்டார். மிஷ்கின் தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிதா’ படத்தை தயாரித்து வருகிறார்.

விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக சிம்பு ப்ரொஜெக்ட், ஆண்ட்ரியாவுடன் கூட்டணி என உள்ளது இவரது சினிமா லயன் அப்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 20 இரவு 12 மணிக்கு பிசாசு 2 அப்டேட் வெளியானது.

myskkin birthday

ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா உடன் சைக்கோ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி நடிக்கிறார்.

pisasu 2

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு வரும் அவருக்கு நல்ல இரண்டாவது இன்னிங்ஸ் ஆக அமைய சினிமாப்பாட்டை சார்பில் வாழ்த்துக்கள்.

 

Continue Reading
To Top