Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண்ட்ரியாவின் பாட்டி லுக்கை வைத்து ரெடியானது பிசாசு 2 பர்ஸ்ட் லுக்.. ஒரிஜினல் போட்டோ உள்ளே
தமிழ் சினிமாவில் தனெக்கென்று ஒரு ஸ்டைலில் சினிமாக்களை எடுப்பவர் இயக்குனர் மிஷ்கின். அடுத்ததாக ஆண்ட்ரியாவுடன் பிசாசு 2 ஆரம்பித்துள்ளார். ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா உடன் சைக்கோ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பூர்ணா முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.
சமீபத்தில் ஆண்ட்ரியா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பர்ஸ்ட் லுக் வைரலானது, ஆங்கிலோ இந்தியன் பெண்மணி போன்ற கெட் அப் பலரது கவனத்தை பெற்றது. மேலும் நெட்டிசன்கள் பலர் இது ஏதுனும் வெளிநாட்டு படத்தின் இன்ஸபிரேஷனாக இருக்குமா என்றெல்லாம் அலசி வந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டோவின் பின்னணி பற்றி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார்.
பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. புகைப்படத்தின் இடது பக்கம் இருப்பது என் தாய்வழி பாட்டி. அவரின் பெயர் ஹெதர். இயக்குநர் மிஷ்கின் என்னிடம் கதை சொன்னபோது என் கதாபாத்திரத்திற்கும், எனது குடும்பத்திற்கும் இடையேயான ஒற்றுமையை பார்த்தேன். பழைய புகைப்படங்களை தேடிக் கண்டுபிடித்து அவருக்கு இந்த போட்டோவை அனுப்பி வைத்தேன்.
என் பாட்டியின் புகைப்படம் பயமுறுத்தும் விதமாகவும் மிகவும் அழகாக இருப்பதாக மிஷ்கின் எனக்கு போன் செய்து கூறினார். அதே லுக்கை தன் படத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றார். அப்படித் தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவானது.
படத்தை நினைத்து பதட்டமாக இருந்தது, இன்னும் இருக்கிறது. ஆனால் புகைப்படத்தை பார்த்த பிறகு என்னுள் ஒரு அமைதி ஏற்பட்டது. அந்த லுக்கை அழகாக உருவாக்கிய குழுவுக்கு நன்றி.
நான் அணிந்திருக்கும் ஸ்கார்ஃப் என் பாட்டியுடையது. அது எனக்கு ராசியாக இருக்கக்கூடும்” என பதிவிட்டுள்ளார்.

pisasu 2 flp
