fbpx
Connect with us

சைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ்.! பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா.? இனி ஒன்னும் பண்ண முடியாது

tamilrockers

News | செய்திகள்

சைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ்.! பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா.? இனி ஒன்னும் பண்ண முடியாது

திருட்டு இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் உரிமையாளரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார். தமிழ் திரைத்துறையில் இருக்கும் நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் சவாலாக இருப்பது திருட்டு இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் இந்த இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் அதே நாளில் திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்து விடுவார்கள்.

இதனால்  திரை துறையினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது இந்த திருட்டு இணையதளம் தமிழ் ராக்கர்ஸ் எங்கிருந்து செயல்படுகிறது இதன் அட்மின் யார்  அவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கோதாவில் குதித்தார்கள் சைபர் கிரைம், ஆனால் தற்போது எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரித்து விட்டார்கள் இதைப்பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2011ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது அதன் அட்மின்கள்  பலர் இருக்கிறார்கள் அவர்கள் கனடா பிரான்ஸ் இங்கிலாந்து சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து செயல் படலாம் என முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடித்தார்கள். அதன்பின்பு இங்கிலாந்தில் இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் டிக்சன் ராஜ் சுவிட்சர்லாந்தில் இருக்கும் அரவிந்த் லோகேஸ்வரன் ஆகியோரின் புகைப்படங்கள் கிடைத்தது அதை வைத்து பல கோணங்களில் விசாரணை நடத்தினோம் ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

திரைப்படத் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு விசிடி தலைதூக்கி இருந்தது ஆனால் அதை யார்  வெளியிடுகிறார் யார் விற்கிறார்கள் என்று எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது அதனால் அவற்றை தடுக்க முடிந்தது ஆனால் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மின்  ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிடுகிறார்கள், பெரும்பாலும் நாம் இணைய தளங்களில் கூகுள் மைக்ரோசாப்ட் போன்றவைதான் அதிகம் கையாளுவோம் ஆனால் இதை தாண்டி ரகசிய இணையதளம் இருக்கிறது அந்த வகையில் டார் டார்ச் போன்ற இணையதளங்கள் இருக்கிறது.

பொதுவாக நாம் கூகுள் யூடியூபில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்யும்போது இதை யார் செய்தார்கள் நாம் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரி என அனைத்தும் கண்டுபிடிக்க முடியும் ஆனால் இந்த டார்  டார்ச்  மூலம் வீடியோவை பதிவேற்றம் செய்வதால் இதை யார் செய்தார்கள் ஐபி என்ன என்ற எந்த விவரமும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது இதை பயன்படுத்தி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.

இதனால்தான் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை ஏனென்றால் அந்த இணையதளம் மூலம் இந்தியாவில் இருந்து கொண்டே நாம் சுவிட்சர்லாந்திலிருந்து பதிவேற்றம் செய்வது போல் ஐபி முகவரி மாற்றிக் காட்ட முடியும்,  அதனால்  தமிழ் ராக்கர்ஸ் முடக்கினாலும் அவர்கள் வேறு ஒரு பெயரில் படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள், இதன்மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மாதம் 10 லட்சம் முதல் 60 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்,

இவர்களின் தைரியத்தையும் வித்தைகளையும் வைத்துப் பார்க்கும்போது சினிமாவில் இருக்கும் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியாக  தமிழ்ராக்கர்ஸ் இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது,அதனால், தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top