பிசாசு-2 எதிர்பார்ப்பை சுக்கு நூறாக்கிய மிஸ்கின் டீசர்.. கொலைவெறியில் ஆண்ட்ரியா!

சைக்கோ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் பலரையும் மிரட்டியது. அதைத் தொடர்ந்து சில வருட இடைவெளியில் உருவாகி வரும் அதன் இரண்டாம் பாகம் தற்போது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கு மிகவும் பவர்புல்லான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் வரக்கூடிய நிர்வாண காட்சியில் நடித்திருக்கிறார்.

இந்த செய்திதான் கடந்த சில மாதங்களாக திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. மேலும் இது தொடர்பாக வெளியான சில புகைப்படங்களும் வைரலாகி வந்தது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமானது.

மேலும் திகில் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் ரசிகர்களை குலைநடுங்க வைக்கும் என்றும், பேய் வரும் காட்சிகள் பயங்கர மிரட்டலாக இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படி பரபரப்பை கிளப்பியிருக்கும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

சில நாட்களாகவே இந்த டீசருக்காக ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது அதை பார்த்து கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையில் காட்சிகள் ஒவ்வொன்றும் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர். அதிலும் ஆண்ட்ரியாவை பார்க்கும் போதே அவர் இந்த படத்தில் எவ்வளவு வெறித்தனமாக நடித்துள்ளார் என்று தெரிகிறது.

டீசரை பார்க்கும் பொழுது பேயிடம் மாட்டி கொண்ட ஒரு குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்பதுதான் கதை போன்று தெரிகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் இருக்கும் இந்த டீசர் தற்போது மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.