fbpx
Connect with us

தல அஜித்தை எதிர்த்து நிற்கும் ரங்கராஜ் பாண்டே.. இவ்வளவு தில்லா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தை எதிர்த்து நிற்கும் ரங்கராஜ் பாண்டே.. இவ்வளவு தில்லா?

அஜித்தை எதிர்த்து நிற்கும் தில்லு யாருக்கு இருக்கு..!

தல அஜித் தற்போது இயக்குனர் வினோத்தின் பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில்  அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டில் ‘அதிகாரம்’ என்று இருக்கலாம் ரசிகர்கள் தயாரித்த போஸ்டர்.  இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் வரும்வரை பொறுத்திருப்போம்.

இன்னுமொரு முக்கியமான கேரக்டரை அப்படக்குழுவினர் வெளியிட்டனர் ‘ரங்கராஜ் பாண்டே’ இதில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ரங்கராஜ் பாண்டே என்ன கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகளை பல கேள்விகள் கேட்பதன் மூலம் திக்குமுக்காட செய்வார் என்பதால் எதிர்த்தரப்பு வாதத்திற்கு பொருத்தமான கேரக்டர்தான் என்று முடிவு எடுத்துள்ளனர்.

அமிதாப்பச்சன் கேரக்டரில் நடிக்கும் அஜித்துக்கு எதிர் வாதம் பேசும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே களமிறங்க உள்ளார்.

இந்த கேரக்டர் அவருக்கு நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் சினிமா உலகில் தலையை எதிர்த்து நிற்கும் தில்லு யாருக்கு இருக்கு.

இப்படம் வரும் மே அல்லது ஜூனில் வெளிவர இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இது மாபெரும் வெற்றிப்படமாக அமைவதற்கு சினிமா பேட்டியின் ரசிகர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top