fbpx
Connect with us

இந்த குடியுரிமை சட்டம்லாம் எங்ககிட்ட செல்லாது.. பொட்டில் அடித்தாற்போல் கூறிய பினராயி ஜெயின்

India | இந்தியா

இந்த குடியுரிமை சட்டம்லாம் எங்ககிட்ட செல்லாது.. பொட்டில் அடித்தாற்போல் கூறிய பினராயி ஜெயின்

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கலவரத்தை கட்டு படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினர். இந்த கலவரத்தில் வலுக்கட்டாயமாக மாணவர்கள் துன்புறுத்தி அடிக்கப்பட்டதாக வீடியோ வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டில்  நடைபெற்றது போன்று டெல்லியிலும் மாணவர்கள் தாக்கப்பட்டது இந்தியா முழுவதும்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி இந்த சட்டத்தை வரவேற்று உள்ளது  இதனை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போராடி வருகின்றனர்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் ஆகியோர் இந்த சட்டத் திருத்தத்தை மாநில அரசு எக்காரணத்தைக் கொண்டும் ஏற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிரனாய் விஜயன் கூறுகையில்,  சிறுபான்மை இருக்கு குடியுரிமை தரக் கூடாது என்ற சட்டத்தை கேரள அரசு ஒரு போதும் ஏற்காது. சிலர் மத்திய அரசை எதிர்த்து மாநில அரசு இதுபோன்ற சட்டங்களை நிறுத்த முடியுமா?  கண்டிப்பாக முடியும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களில் களமிறங்கியுள்ளனர். இந்த சட்டத்துக்கு எதிராக நடிகர் சித்தார்த் ஆளும் கட்சியை எதிர்த்து தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அதில் அம்மா ஜெயலலிதா இருந்தால் இந்த சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்து இருப்பார் செயல்படுத்திருக்க மாட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top