டிஆர்பி ரேட்டில் விஜய் நடித்த ‘பைரவா’ படத்தை விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு கடந்த வாரம் செம கொண்டாட்டம் தான். ஏனெனில் எல்லா தொலைக்காட்சிகளிலும் விஜய் படம் தான் ஒளிபரப்பானது. அந்த வகையில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ‘பைரவா’ சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது.

இந்தப் படம் டிஆர்பி ரேட்டில் 14511000 -வாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் ‘பைரவா’ 3வது இடம் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் இன்றும் ‘பிச்சைக்காரன்’, ‘பாகுபலி’ படங்களே இருந்து வருகின்றன.