பத்ரகாளி பாணியில் வெளியான பிச்சைக்காரன் 2 டைட்டில் லுக் போஸ்டர்.. என்ன கதைன்னு யூகிக்க முடியலையே!

விஜய்யின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி(vijay antony). அந்த சமயத்தில் தொடர்ந்து இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அறிமுகமாக அவருக்கும் அந்த ஆசை வந்ததில் தப்பில்லையே.

ஆரம்பமே அட்டகாசமாக தொடங்கிய விஜய் ஆண்டனியின் சலீம், சைத்தான், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற தரமான படங்களை கொடுத்தார்.

அதிலும் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் செம வரவேற்பு கிடைத்து 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தற்போது தெலுங்கிலும் அவரது படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் தற்போது தன்னுடைய சூப்பர் ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் ஜோடி போட உள்ளார். ஓ மை கடவுளே படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை இயக்க பல இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் விஜய் ஆண்டனி தானாகவே இயக்கி நடிக்க உள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

pichaikaran-2-title-look-poster
pichaikaran-2-title-look-poster
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்