fbpx
Connect with us

Cinemapettai

பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் இளம் முத்த நாயகன்.. அவர் எப்படி இவர் கூட?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் இளம் முத்த நாயகன்.. அவர் எப்படி இவர் கூட?

தமிழ் சினிமாவில் மிகவும் திருப்திகரமான இயக்குனர் என்றால் அது இயக்குனர் சசி தான். சினிமாவுக்கு வந்த 20 வருடங்களில் வெறும் ஏழு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றால் ஆச்சரியம்தான்.

சொல்லாமலே, டிஷ்யூம், சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன், 555 போன்ற படங்கள் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான படங்களாக இருந்து வருகின்றன.

அதிலும் விஜய் ஆண்டனியுடன் இவர் இணைந்த பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பலருக்கும் பல கோடி லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்த சசி அடுத்ததாக தமிழ் சினிமாவின் இளம் முத்த நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாணுடன் கூட்டணி போட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமீபகாலமாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்துமே கமலஹாசன் பேரன் போல் பார்க்கும் அனைத்து நாயகிகளுக்கும் உதட்டு முத்தம் கொடுப்பதில் குறியாக இருக்கிறார்.

சசி படத்தில் பெரும்பாலும் அந்த மாதிரியான காட்சிகள் இருக்காது. இந்நிலையில் இந்த கூட்டணி எப்படிப்பட்ட படத்தை தரப் போகிறது என இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கண்டிப்பாக இந்த படம் ஹரிஷ் கல்யாண் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Continue Reading
To Top