Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடல் நலிவுற்ற பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஹீரோ.! ஹாலிவுட் ரசிகர்கள் கவலை

பைரேட்ச் ஆஃப் தி கரீபியன் சீரியஸ் படங்களை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காரணம் படத்தில் காட்டப்படும் பேண்டஸி காட்சிகளும், கேப்டன் ஜாக் ஸ்பேரோவும். ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமைந்த அந்த படங்களில், கேப்டன் ஜாஜ் ஸ்பேரோவாக ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் அசத்தியிருப்பார். இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இந்த படம் மூலம் ரசிகர்களைப் பெற்றார் ஜானி. ஜாக் ஸ்பேரோ ஒரு கதாபாத்திரமே அவருக்கு எக்கச்சக்கமான பணத்தையும், புகழையும் தேடிக் கொடுத்தது. புகழ் வெளிச்சத்தில் இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையிலும் ஜானி டெப் சிக்கிக் கொள்வதுண்டு.

செல்வத்தில் திளைத்த ஜானி டெப், திடீரென கடன் பட்டார். தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை நண்பர்களுடன் இணைந்து தி மேனேஜ்மெண்ட் குரூப் என்ற நிறுவனம் மூலம் முதலீடு செய்ததாகவும், அவர்கள் 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குத் தன்னிடம் மோசடி செய்துவிட்டதாகவும் ஜானி டெப் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரை மறுத்த தி மேனேஜ்மெண்ட் குரூப் நிறுவனம் ஜானி டெப்பின் சொத்துகளைப் பட்டியலிட்டதுடன், அவர் ஆடம்பரமாக செலவு செய்த கணக்கையும் வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பியது. ஆடம்பர செலவுகளுக்காக மட்டுமே அவர் மாதந்தோறும் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவு செய்ததாக அந்த நிறுவனம் கணக்கு காட்டியது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் விஷயத்திலும் ஜானி டெப் சர்ச்சைகளில் சிக்கினார்.

மறுபுறம் குழந்தைகள் மீதான பாசத்தால் ஜானி, ரசிகர்களை நெகிழச் செய்த நிகழ்வுகளும் நடந்த வரலாறு உண்டு. கரீபியன் தீவுகளில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் 5-ம் பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது, திடீரென கேப்டன் ஜாக் ஸ்பாரோ கெட்டப்புடன் ஜானி வெளியே கிளம்பினார். ஷூட்டிங்கில் கிடைத்த கேப்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு விசிட் அடித்தார். எலும்பு வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்கும் அந்த மருத்துவமனையில் இருந்த குழந்தைகள், கேப்டன் ஜாக் ஸ்பேரோவைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். தனது மகன் நினைவாக குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்தியதாகக் கூறி நெகிழந்தார் ஜானி டெப்.

இந்தநிலையில், ஜானி டெப்பின் சமீபத்திய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த புகைப்படங்களில் அவர் உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். இதனால், அவர் உடல் நலிவுற்றிருப்பதாகக் கூறி ஹாலிவுட் ரசிகர்கள் விம்முகிறார்கள். 55 வயதான ஜானி டெப், ரஷ்யாவின்செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ஃபோர் சீசனில் ஹோட்டலுக்கு வெளியே ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தனது குழுவான ஹாலிவுட் வேம்பையர்ஸ் உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் ரஷ்யா சென்றிருக்கிறார். கறுப்பு நிற கூலிங் கிளாஸூடன் மாஸ்கோவில் எடுத்த புகைப்படத்தை ஜானி டெப் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களுக்கு, ஏன் உடம்பு மெலிந்து விட்டீர்கள்.. உடல் நலக் குறைவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர். அவர் உடல் மெலிந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வாங்க கேப்டன் ஜாக் ஸ்பேரோ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top