Tamil Cinema News | சினிமா செய்திகள்
சபரிமலையில் பெண்கள் வழிபடும் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி: விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதைப் போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் பற்றி விசாரணை நடத்தும்படி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் சுவாமி கோயில் உலக அளவில் பிரபலமான இந்து மத ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். எனினும், இங்கு பெண்களை அனுமதிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த தடைகளை மீறி, சில பெண் நடிகைகள், அரசியல்வாதிகள் சபரிமலை சென்று வழிபாடு நடத்துவதும், பின்னர் அவர்கள் வழக்கு விசாரணையில் சிக்குவதும் வழக்கமான ஒன்றே.
இதுதொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்துவரும்போதிலும், கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம், பெண்களை அனுமதிப்பதில் கடும் விதிமுறைகளை பின்பற்றுகிறது.
இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் சிலர் உற்சாகமாக சுவாமி தரிசனம் செய்வதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில், இளம்பெண்களும், நடுத்தர வயது பெண்களும் மகிழ்ச்சியுடன் இறைவனை தரிசிக்கின்றனர். இந்த புகைப்படங்கள் கேரள அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுபற்றி விசாரணை நடத்தும்படி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தகைய சூழலில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன என்றும், பெண்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்றும், விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கேரள அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
