Tamil Cinema News | சினிமா செய்திகள்
நர்மதை நதிக்கரையில் எடுக்கப்பட்ட காதல் காட்சி வெளியிட்ட த்ரிஷா.. பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் அவர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக்கப்பட்ட வருகிறது. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட உள்ள நிலையில், முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோட்டை நகரம் என்கிற குவாரியர் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குவாரியர் கோட்டையானது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை கோயில்களால் நிறைந்தது.
இதில் அரியவகை சிற்பங்கள் மற்றும் சமண சிலைகளும், உயரமான கோட்டை மதில் சுவரும் உள்ளது. ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த சிறப்பு வாய்ந்த நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே பகுதியில் பாயும் நர்மதை நதி ஓடும் மகேஸ்வர் நகரில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களான வந்தியத்தேவராக ‘கார்த்திக்’ மற்றும் குந்தவையாக திரிஷாவும் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

narmada-river-cinemapettai.jpg
அப்போது நர்மதை நதிக்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை திரிஷாவும், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி வர்மாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டதால்,

narmada-river
மணிரத்தினம் படப்பிடிப்புத் தளத்திற்கு எக்கச்சக்கமான கட்டுப்பாட்டை விதித்தார். இந்த சூழலில் திரிஷா மற்றும் ரவி வர்மன் வெளியிட்டிருக்கும் நர்மதை நதிக்கரை புகைப்படத்தால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் சலசலப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
