Actor Vijay : விஜய் உடன் எத்தனை நடிகைகள் நடித்தாலும் எப்போதும் திரிஷாவுக்கு இணையான கெமிஸ்ட்ரி யாருடனும் ஒர்க் அவுட் ஆனதில்லை. கில்லி, குருவி போன்ற படங்களை தொடர்ந்து சமீபத்தில் லியோ படத்திலும் இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.
இப்போதும் கில்லி படம் என்றாலே ஞாபகம் வருவது வேலு, தனலட்சுமி ஜோடி தான். 14 வருடங்கள் கழித்து லோகேஷின் லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷா இணைந்தது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது.
அதோடு எவர்கிரீன் ஜோடியாக இவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த த்ரிஷாவுக்கு இப்போது தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் கைவசம் இருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் என பெரிய நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர விஜய்யின் கோட் படத்திலும் திரிஷா கேமியோ தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்ற மொழி படங்களிலும் படு பிஸியாக திரிஷா நடித்து வருகிறார்.
சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா
இந்நிலையில் தெலுங்கில் விஷ்வம்பரா என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் இதற்கான படப்பிடிப்பில் திரிஷா இருக்கிறார். அப்போது சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் கீராவாணி ஆகியோருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அதில் திரிஷா டெனிம் ஷர்ட் அணிந்திருக்கிறார். பொதுவாக விஜய் டிமைன்ட் ப்ளூ ஷர்டில் தான் அதிகம் வருவார். அவருக்கு விருப்பமான இந்த ஷர்டை திரிஷாவுக்கு பரிசாக கொடுத்திருப்பாரோ என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி விட்டனர்.
ஏனென்றால் கில்லி படத்தில் நடித்த போதே இவர்கள் இடையே கிசுகிசுக்கள் வெளியானது. அதோடு லியோ படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவை போட சொன்னதே விஜய் தான் என்ற செய்தியும் உலாவிக் கொண்டிருந்தது. இப்போது சும்மா இருந்த வாய்க்கு வெத்தலை கிடைத்தால் சொல்லவா வேண்டும்.
டெனிம் ஷர்டில் திரிஷா விஜய்
எதார்த்தமாக திரிஷா டெனிம் ஷர்டில் வர விஜய் அதே நிற ஷர்டில் இருக்கும் புகைப்படத்துடன் இணைத்து நெட்டிசன்கள் இணையத்தையே இரண்டாக்கி வருகிறார்கள்.