Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷகீலா தத்தெடுத்த திருநங்கையின் வைரலாகும் புகைப்படம்.. ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போல
தென்னிந்திய சினிமா உலகையே ஆட்டிப்படைக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ஷகிலா. இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியிருந்தாலும், பிறகு சில்க்ஸ்மிதாவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி நாயகியாக மாறி விட்டார்.
அந்தக் காலம் முதல் இந்தக் கால ரசிகர்கள் வரை அனைவருக்கும் ஷகிலாவின் பெயரைக் கேட்டாலே ஒரு தனி குஷி வந்துவிடும். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அம்மா என்ற கோணத்தில் பார்க்கப்படும் ஷகிலா, ஒருகாலத்தில் அனைவரையும் வசியம் செய்து வைத்திருந்த கவர்ச்சி நடிகை ஆவார்.
மேலும் ஷகிலாவிற்கு திருமணம் ஆகவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஷகிலா ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம். அவரது பெயர் ‘தங்கம்’ என்றும் சொல்லப்படுகிறது.
milla-cinemapettai
தற்போது தங்கத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கத்தின் உண்மையான பெயர் ‘மிலா’ என்றும்,
milla-cinemapettai
இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் கூட ஷகிலா கலந்துகொள்ளும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருகை தந்து பிரியங்கா, அஸ்வின் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
எனவே தற்போது இதையெல்லாம் அறிந்து கொண்ட ஷகிலாவின் ரசிகர்கள், இவரது பரந்த மனப்பான்மையை பாராட்டியது மட்டுமல்லாமல் அம்மாவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மகள் இருக்கிறார் என்றும் மெய்மறந்து உள்ளனர்.