fbpx
Connect with us

Cinemapettai

பேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள்.! பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு

News | செய்திகள்

பேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள்.! பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு

அஜித் விஜய் என போட்டிகள் இருக்கும்பொழுது இப்ப அஜித் ரஜினி என போட்டி வருகிறது. ஏற்கனவே விஜய் சச்சின் படத்தில் ரஜினியுடன் போட்டி போட்டுள்ளார். இந்த முறை அஜித் விஸ்வாசம் படம் மூலம் வருகிறார். ஆக படம் நன்றாக இருந்தால் கண்டிப்பா இரண்டும் வெற்றிபெறும் ஆனால் வசூல் அளவுதான் கேள்விகுறி.

வருகின்ற பொங்கலுக்கு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது இதில் ரஜினியின் பேட்ட படத்திற்கும் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. நிறைய அஜித் ரசிகர்களும் ரஜினிக்கு ரசிகர்கள்தான் ஆக இரண்டு படமும் திரும்ப திரும்ப பார்ப்பார்கள் ஆனால் யார் படம் முதலில் என்பதுதான் கேள்வி.

இப்படி இருக்க இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் அதாவது வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என இரு தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் வெளியானால் வசூலில் கடும் பாதிப்பு ஏற்ப்பாடும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. படங்கள் நன்றாக இருந்தாலும் தியேட்டர் அளவு குறைவுதானே அதில் வசூல் குறையுமே என பயபடுகின்றனர்.

ajith-rajini

இந்த நிலையில் பிரபல திரையரங்கமான ராக்கி திரையரங்க உரிமையாளர் ரஜினி படத்தை ரிலீஸ் செய்வீர்களா அல்லது விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்வீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக தல படம் தான் என பதில் அளித்துள்ளார். மேலும் அதில் ராக்கி மினி ராக்கி என ஸ்க்ரீன்கள் உள்ளன. இவர் சொல்வதை பார்த்தால் அனைத்து ஸ்க்ரீன் அஜித்துக்கு மட்டும்தான் போலருக்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top