Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட, விஸ்வாசம் தியேட்டர் நிலவரம்.. அனல் பறக்கும் போட்டி
பேட்ட, விஸ்வாசம் தியேட்டர் நிலவரம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், விஜய்சேதுபதி, திரிஷா, நவாசுதீன் சித்திக் மற்றும் சசிகுமார் ஆகியோரின் நடிப்பில் தயாராகும் பேட்ட படத்தின் ரிலீஸ் தேதியை புதிய போஸ்டருடன் அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. பொங்கல் திருநாளை கருத்தில் கொண்டு ஜனவரி பத்தாம் தேதியில் இப்படம் விஸ்வாசம் படத்துடன் மோத தயாராக இருக்கிறது.
நமக்கு கிடைத்த நெருங்கியவட்டாரங்கள் அடிப்படையில் பேட்டை 600க்கும் அதிகமான திரையரங்குகளிலும் விஸ்வாசம் 450 க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ்நாட்டில் வெளி வரப்போவதாக தெரிகிறது. பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வருவதால் ஆரோக்கியமான போட்டி நிலவும் என விநியோகஸ்தர்கள் மத்தியிலும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.
பேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நாம் இதுவரை பார்க்க ஏங்கிய ரஜினியை நம் கண் முன்னே நிறுத்தி சென்றது. தலைவர் சும்மா பூந்து விளையாடி இருக்காருப்பா எனும் கருத்து ரசிகர்களிடையே அதிகமாக உலாவிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் தலைவரின் தீவிர ரசிகர் என்பது நாடறிந்த விஷயம் எனவே ஒரு ரசிகன் தன் தலைவனை எப்படி ரசிப்பான் எனும் கண்ணோட்டத்தில் இருந்து அவர் எடுத்து இருப்பார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
மேலும் பாட்ஷா விற்கு பிறகு 26 வருடங்கள் கழித்து ரஜினியின் படம் பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது. பாட்ஷா இன்றுவரை தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமாவின் கமர்சியல் பார்மட்டை பாட்ஷா விற்கு முன் பாட்ஷா விற்கு பின் என இரு பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம் ஒரு கமர்சியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் நாம் பாட்ஷாவில் கண்டது இன்றும் தலைவரின் சிறந்த 10 படங்களில் பாட்ஷாவிற்கு ஒரு தனி இடம் உண்டு இந்த மேஜிக்கை மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் வரும் ஜனவரி 10ஆம் தேதி கடப்பார் என்று ஏகோபித்த மக்களால் நம்பப்படுகிறது ஜனவரி10 பேட்ட பராக்.
