Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
Published on
பேட்ட விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
கடந்த 10ஆம் தேதி ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.
இந்த இரண்டு படங்களும் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் 11 நாட்கள் முடிவில் பேட்ட திரைப்படமும் விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் தினமும் எவ்வளவு வசூல் ஆகிறது என்ற தகவலை தாக்கல் செய்ய வேண்டும் இரண்டு திரைப்படங்களும் வெளியான அனைத்து திரையரங்கமும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
