தன் எதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார் விஜய்சேதுபதி. அவர் நடித்து வெளிவந்த 90 சதவீத படங்கள் வெற்றி. இதற்கு முக்கிய காரணம் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் மட்டுமல்லாமல் தான் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பேட்ட’ படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிப்பில் மற்றும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ‘மரண மாஸ்’ என்னும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வில்லனான விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  பேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..

இதனை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னர் கூறியபடி படத்திற்கான தியேட்டர்கள் புக்கிங் 30 சதவீதம்தான் மீதம் இருப்பதால் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் ‘படம் செம படம், அதில் எந்த சந்தேகமும் இல்லை, டப்பிங் முடித்துவிட்டேன், கதை தெரியும், கார்த்திக் முன்பே கூறிவிட்டார். படத்தை தாண்டி ரஜினி அவர்களுடன் நான் நடித்த அந்த நிமிடங்கள் எனக்கு சொந்தமானது” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜீத் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அழிக்க நினைத்தாரா விஜய் சேதுபதி?