Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தின் கதை லீக் ஆனது..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
பரபரப்பான போட்டிகளுக்கிடையே பொங்கலன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளிவர உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தல அஜித்தும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். பேட்ட படத்தின் கதை சுவாரஸ்யமான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்துவாகவும், சசிகுமார் முஸ்லிமாகவும் இதில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இருவர் வீட்டிலும் எந்தவொரு விழாக்கள் நடந்தாலும் மிக நெருக்கமான சொந்த மந்தமாக இருப்பார்கள். தன் குடும்பத்தில் குழந்தைகளுக்கு காது குத்துவதாக இருந்தாலும் தங்கள் மடியில் வைத்து தான் குத்துகின்றனர் இது அவர்கள் இரு குடும்பத்தினருக்கும் உள்ள ரத்த சொந்தத்திக்கும் மேலான ஒரு விஷயத்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இந்த ஒரு சிறுகதை பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பாட்ஷா படத்தில் ரஜினி இந்துவாகவும் தனது நண்பர் முஸ்லிமாகவும் நடித்திருப்பார். இதில் முக்கியமான கதைக்கருவாக இன்று முஸ்லிம்களுக்கு இடையிலான ஒரு சொந்த பந்தத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேலுள்ள காவி கலர் நீக்க படும் என்பதே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மிக அழுத்தமாக கதையில் கூறியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் ரஜினிக்கு பி.ஜே.பியின் மீது மோகம் உள்ளது என்ற ஒரு தவறான கருத்தை தூக்கி எறியப்படும் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இது போன்ற மத சம்பந்தப்பட்ட அனைத்து படங்களும் வெற்றி அடைந்துள்ளது அதுவும் சூப்பர் ஸ்டார் படம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான்.
