Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.
பேட்ட
கபாலி, காலா (ரஞ்சித். பா) தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனருடன் (கார்த்திக் சுப்புராஜுடன்) இணைந்த படம் பேட்ட. இரண்டு கெட் – அப் என்பதால், அவரின் ரசிகர்கள் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர். தாடி வைத்து சூட்டில் மாஸ் என்றால், மீசை வைத்து வேஷ்டியில் க்ளாஸாக இருக்கிறார் ரஜினிகாந்த். சிம்ரன், திரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளனர் படத்தில்.
இந்நிலையில் பேட்ட படத்தினை பற்றி தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார் ரஜினி.
It’s a wrap for #Petta. 15 days ahead of schedule. I thank @sunpictures @karthiksubbaraj @DOP_Tirru and the entire team Involved. Here’s Wishing everyone a very happy #Vijayadashami ??
— Rajinikanth (@rajinikanth) October 19, 2018
“பேட்ட பட ஷூட்டிங் முடிந்தது. திட்டமிட்டதற்கு 15 நாள் முன்பே முடிந்தது. சன் பிக்ச்சர்ஸ், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு மற்றும் முழு டீமுக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். “
