fbpx
Connect with us

பேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.? இனியாவது திருந்துவாரா.!

News | செய்திகள்

பேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.? இனியாவது திருந்துவாரா.!

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை மாரணும் ஒருவர்,இவர் புதிய படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்வார் அதனாலேயே இவர் மீது பல தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் செம கோவத்தில் இருக்கிறார்கள்.

petta

இந்தநிலையில் சமீபத்தில் வெளியான பேட்டை படத்தால் இவரின் வீடியோ ஒன்று நீக்கப்பட்டுள்ளது,பேட்ட திரைப்படத்தை பலர் விமர்சனம் செய்து வந்தார்கள் இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் பேட்ட திரைப்படத்தை மற்ற திரைப்படங்களை போல் கழுவி கழுவி ஊற்றினார், அவர் கூறுகையில் பேட்ட திரைப்படம் முதல் பாதி அற்புதம் நீங்கள் ஒரு ரஜினி ரசிகராக இருந்தால் உங்களுக்கு முதல் பாதி படமே போதும், இரண்டாம் பாதி வேறு யார் எடுத்தது போல் இருந்தது, ஒருவேளை இரண்டாம் பாதியை தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என தாறுமாறாக விமர்சனம் செய்தார் ப்ளூ சட்டை மாறன்.

petta review

petta review

இப்படியிருக்க பேட்டை படத்தை விமர்சனம் செய்த வீடியோ ஒன்று யூட்யூப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டது இந்த தகவலை பிரபல விமர்சகரான பிரசாந்த் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் அதேபோல் தற்பொழுது ரி-அப்லோட்செய்துள்ளார்கள், இதை ரசிகர்கள் பலர் கமெண்டில் கேட்டுள்ளார்கள், இந்த வீடியோ காப்புரிமை காரணமாக யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள், எது எப்படியோ ப்ளூ சட்டை மாறனுக்கு இப்படி ஒரு அடி விழுந்தது தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மகிழ்ச்சிதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top