Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு புகைப்படத்தால் பேட்ட படத்தில் ரஜினியின் ரோல் லீக்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் போட்டி போடுவார்கள், இந்த நிலையில் மிக விரைவாக ரஜினி இயக்கும் வாய்ப்பு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு கிடைத்துவிட்டது.

petta rajini
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் பேட்ட படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது அதில் ரஜினி தனது கையில் மிசா-109 என பச்சை குத்தப்பட்டு உள்ளது அதனால் இவர் படத்தில் மிசா சட்டத்தில் கைதான ஒருவராக இருக்கலாம் ஏன் சிறை செல்கிறார் என்பது படத்தில் பிளாஷ்பேக்காக காண்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தை பற்றி எந்த தகவலும் வெளியிடாமல் வருவது ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது
