Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தின் வியாபாரமே இத்தனை கோடியா.? கேட்டாலே சும்மா அதிருதில்ல
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் பேட்ட இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, சமீபத்தில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது இந்த நிலையில் தற்போது படத்தின் வியாபார நிலவரம் வெளியாகியுள்ளது பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்க உரிமை மட்டுமே 124 கோடிக்கு வியாபாரத்தை நடத்தியுள்ளார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
பேட்ட படத்தின் சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, ஆகிய பகுதிகளை ரெட் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளார்கள் இருந்தாலும் ஓவரால் தமிழக உரிமை மட்டும் 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
அதேபோல் தெலுங்கானாவில் 13 கோடிக்கு கேரளாவில் தோராயமாக ஆறு கோடிக்கும் கர்நாடகாவில் 11.25 கோடி இந்தியாவிலுள்ள மற்ற பகுதிகளில் ஐந்து கோடிக்கும் பேட்ட திரைப்படம் விற்பனையாகியுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள் அங்கு மட்டும் 9 கோடி விற்பனையாகியுள்ளது இந்தியாவை தாண்டி பேட்ட திரைப்படம் 34 கோடி விற்பனை ஆகியுள்ளதாம்.
