Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரன் லுக் இதுவா.? அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என் கனவு சூப்பர் ஸ்டார் அவர்களை இயக்க வேண்டும் என்பதுதான் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

super star rajni
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது, சமீபத்தில் வெளியான பேட்ட மோஷன் போஸ்டர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வைரல் ஆனது. இந்த நிலையில் படத்தில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் படத்தில் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் இவர் என்றால் சொல்லவே தேவையில்லை கண்டிப்பாக தாறுமாறான இசையை கொடுத்துவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் திடீரென தனது சமூக வலைத்தளங்களான ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் படத்தில் இடம்பெறும் காட்சியா, இல்லை இவர் சாதாரணமாக எடுத்து பேட்ட என குறிப்பிட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.
Petta pic.twitter.com/1qMIgEpb1e
— Simran (@SimranbaggaOffc) September 16, 2018
