fbpx
Connect with us

பேட்ட விமர்சனம்.. கொல காண்டில் பட்டையை கிளப்பினாரா ரஜினி

petta-audio

Reviews | விமர்சனங்கள்

பேட்ட விமர்சனம்.. கொல காண்டில் பட்டையை கிளப்பினாரா ரஜினி

பேட்ட படத்தின் விமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஐந்தாவது படம் நான்கு படங்கள் எடுத்தபின் ரஜினியை வைத்து இயக்கும் அளவுக்கு ஜிகர்தண்டா படம் ரஜினியை கவர்ந்தது. வழக்கமாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பல திருப்புமுனைகள் ஆச்சரியங்கள் இருக்கும் இந்த படத்திலும் இருக்கிறது அதுவும் கடைசி காட்சி பேர் போடும் வரை இருக்கிறது. ஆனால் அவர் டச் இல்லை இது ரஜினி படம் மட்டுமே.

பேட்ட படத்தை இரண்டு வேறு பாதியாக பிரித்து வைத்து கார்த்திக் சுப்புராஜ் படமெடுத்திருக்கிறார். முதல் பாதியில் அனைவரும் ரசிக்கிற மாதிரி இருக்கிறது. இரண்டாம் பாதியில் ரஜினி ரசிகர்கள் கண்டு ரசிப்பது போல் இருக்கிறது.

படத்தில் சிம்ரன் திரிஷா சசிகுமார் பாபி சிம்ஹா குரு சோமசுந்தரம் என பல நட்சத்திரங்கள் இருக்கின்றன ஆனால் திரிஷாவுக்கு ஒரு பத்து நிமிடம் சிம்ரனுக்கு ஒரு 15 நிமிடம் என சிறுசிறு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர்

நவாசுதீன் சித்திக் வில்லன் கதாபாத்திரத்தில் மிக அற்புதம். கூடவே விஜய் சேதுபதி நடிப்பும்  நன்றாகவே இருந்தது ஆனால் இது விஜய் சேதுபதி படம் அல்ல.

தொண்ணூறுகளில் ரஜினியிடம் இருந்த ஸ்டைல், டான்ஸ், சண்டை என அனைத்தும் பழைய ரஜினியை பார்ப்பது போலவே இருந்தது. அனிருத் இசை நன்றாக இருந்தது ஆனால் என்ன காரணமோ படத்தில் பாதி காட்சிகளில் இளையராஜாவின் பழைய பாடல்களை வைத்து ஓட்டிவிட்டார்.

இரண்டாவது பாதியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம், கடைசி முப்பது நிமிடம் மிகக் கொடுமையான வன்முறைகள் துப்பாக்கி சண்டை என மரணமாக செல்கிறது படம்.

இறுதியாக ரஜினி ஸ்டைல் ரஜினி மாஸ் என ரஜினி ரசிகர்கள் பழைய ரஜினியை அனுபவித்து படம் பார்க்கலாம்.

Rating: 3.25 / 5

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Reviews | விமர்சனங்கள்

Advertisement

Trending

To Top