petta-audio
petta

பொங்கல் ரேஸில் நடக்கும் எதிர்பார்ப்புகளை நினைத்தால் நாளுக்கு நாள் பி பி அதிகரிக்கிறது. சமீபத்தில் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் மட்டுமே ரிலீஸ் பண்ணி பல சாதனைகளை வைத்து விட்டார் அஜீத்.

ஆனால் பேட்ட படத்தின் அறிவிப்புகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வருகிறது. வெறும் சிம்ரனுடன் இருக்கும் படத்தை மட்டும் வெளியிட்டு அதிர வைத்த சூப்பர் ஸ்டார். இப்பொழுது அடுத்த அறிவிப்பு வந்துள்ளது.

மரண மாஸ் காட்டிவரும் பேட்ட படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப் பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் விளம்பரத்திற்காக பல கோடிகளை செலவிடும் அதிலும் சூப்பர் ஸ்டார் படம் நம்ம சொல்லவே தேவையில்லை.

வரும் பொங்கலுக்கு தல அஜித்துடன் மோத போகும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தின் ‘சிங்கிள் ட்ராக்’ வரும் திங்கள் டிசம்பர் 3ஆம் தேதியன்று வெளிவரும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் 2.o படம் சமீபத்தில் வெளிவந்த மிக பிரமாண்டமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று படம் நன்றாக ஓட வேண்டும் என்று மண்சோறு சாப்பிட்டார்கள். இது அவர் மேல் உள்ள வெறித்தனமான அன்பையும் ரசிகர்களின் ஆதரவையும் வெளிக்காட்டுகிறது.

வரும் பொங்கல் தல பொங்கல் சூப்பர்ஸ்டார் பொங்கலா  என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் இருவரும் சேர்ந்து மக்களுக்கு விருந்தளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதிகம் படித்தவை:  பேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்!