Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார், அனிருத் முதல் முதலாக ரஜினி படத்திற்கு இசை அமைக்கிறார் சமீபத்தில்தான் பேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில் ரஜினி தற்பொழுது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் #Metoo பற்றி பேசியுள்ளார், அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர்கள் சிலர் பேட்ட படத்தின் பஞ்ச் டயலாக்கை கூறச் சொன்னார்கள் அதற்கு ரஜினியும் பேட்ட பராக் எனக்கூறி மீடியாவை அதிர செய்தார்.
