fbpx
Connect with us

Cinemapettai

நேற்றைய பேட்ட பட இசை வெளியீடு அப்டேட்டில் இதை சேர்க்க மறந்துவிட்டேன் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

News | செய்திகள்

நேற்றைய பேட்ட பட இசை வெளியீடு அப்டேட்டில் இதை சேர்க்க மறந்துவிட்டேன் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

தலைவர் ரஜினிக்கு ரண்டு கெட் – அப். தாடி வைத்து சூட்டில் மாஸ் என்றால், மீசை வைத்து வேஷ்டியில் க்ளாஸ்.படத்தில் பாபி சிம்ஹா, சந்தீப் கிஷன், சிம்ரன், திரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய்சேதுபதி, சசிகுமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளனர். திரு ஒளிப்பதிவு, எடிட்டிங் விவேக் ஹர்ஷன். அனிருத் இசை. ஸ்டண்ட்ஸ் பீட்டர் ஹெய்ன். இயக்கம் கார்த்திக் சுப்புராஜ். சர்கார் படத்தினை தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் வெளியிடும் அடுத்த பிரம்மாண்ட படம்.

பேட்ட ஆல்பம் பராக்

Petta

நேற்று தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டருடன் இசை வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். முதல் சிங்கிள் பாடல் டிசம்பர் 3 மற்றும் இரண்டாவது பாடல் 7 அன்று வெளியாகுமாம். அணைத்து பாடல்களும் டிசம்பர் 9 ரிலீஸ் என்பதே அது.

வரும் வாரம் பிரம்மாண்டமாக 2.0 ரிலீசாகிறது. பொங்கலுக்கு பேட்ட வெளிவரும் என முன்பு (சிம்ரன் – ரஜினி) ரிலீசான போஸ்டரில் கூட வெளியாகி இருந்தது . இந்நிலையில் நேற்றய ஸ்டைலிஷ் போஸ்டரில் ரிலீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை. இணையத்தில் சிலர் அப்போ படம் ஏப்ரல் 14 தள்ளிபோகிறதோ என்று கேட்க ஆரம்பித்தனர்.

petta

இதனை தான் இயக்குனர் 2019 பேட்ட பொங்கல் என்பதை சேர்க்க மறந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

சன் பிக்ச்சர்ஸ் போன்ற நிறுவனம் இத்தகைய முக்கிய செய்தியை தங்கள் போஸ்டரில் எப்படி மிஸ் செய்தனர் என்பதே ஆச்சர்யமாக உள்ளது. எனினும் தல அஜித்தா அல்லது அல்லது தலைவர் யார் மாஸ் ஓப்பனிங் காட்டுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்பம். பொங்கல் வருது பராக் பராக்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top