Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தினால் விஸ்வாசம் ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா.? இதோ அதிரடி அறிவிப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார், படத்திற்கு D இமான் தான் இசையமைத்து வருகிறார்.

Viswasam-Pongal-release
சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக இணைந்துள்ளதாலும் கிராமத்து கதையில் கிராமத்தில் லுக்கில் அஜித் தோற்றமளிப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தினை காண காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஜினியின் பேட்ட திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதால் அஜித்தின் விசுவாசம் திரைப்படம் வெளியிடும் தேதி தள்ளிப்போகும் என சமூக வலைதளத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
இந்த தகவலுக்கு தற்பொழுது விசுவாசம் படக் குழுவில் இருந்து தயாரிப்பு தரப்பில் பதில் அளித்துள்ளார், அதில் கண்டிப்பாக விசுவாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என உறுதியாக கூறி உள்ளார்கள், மேலும் அஜித் viswasam படத்திற்கு பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் இயக்குனருடன் இணைவார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இது தல பொங்கல் தான் யாராலையும் தடுக்க முடியாது என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
