Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனி பெட்ரோல் விலை ரூ.55 மட்டுமே! மத்திய அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் ஏறி கொண்டிருகிறது. கூடிய சீக்கிரம் ரூபாய் 100 தொட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கொதித்து பந்த் லாம் நடத்தினர்.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை பொதுமக்களுகு குறைவாக கிடைக்க எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும் என்றும் இதற்காக 5 ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் என்றும் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார். ஆனால் இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் டீசல் எப்போது விற்பனைக்கு வரும் என்பதும், அப்படியானால் எத்தனால் இல்லாத பெட்ரோல், டீசல் விலை குறையாதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
