கேரளாவில் இருந்து இன்று சென்னை திரும்பிய கமல்,செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வெளிநாடுகள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்கக்கூடாது.

kamal
kamal haasan

இந்த விலை உயர்வை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், “குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை அரசு முறையாக கவனிக்கவில்லை.

இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தேவை என்ன என்பதை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும்” என்றும், “அரசு ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்ற வேண்டும். தற்போது குடிநீர் பிரச்சனைக்கு கிராமசபை சிறப்பாக செயல்பட்டால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிது” என்று கூறினார்.

Kamalahaasan

மேலும், “வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். அடுத்த மாதம் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறேன். அவர் தான் தேதி கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.