இரண்டு வருடங்களுக்கு பின் அஜித்தின் வலிமை படம் இன்று வெளிவந்தது. கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இந்தப் படம் இன்று திரையிடப்படுகிறது. அஜித்தின் ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
படம் எப்படி இருக்கு என்பது போன்ற விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் அனல் பறக்க வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கில் திரையரங்கில் அதிகாலை 5 மணி காட்சி திரையிடப்பட்டது. .
டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு மட்டுமே இந்த காட்சி அனுமதிக்கப்பட்டது. அடுத்த காட்சிக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் சம்பவமாக அடையாளம் தெரியாத இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை தியேட்டரில் எரிந்து விட்டு சென்றனர்.
இந்த குண்டு வெடித்த தினால் அங்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அதுமட்டுமின்றி அஜித் ரசிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அஜித்தின் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பா.? இல்ல தியேட்டர் உரிமையாளர்கள் மீது எதுவும் வஞ்சம் வைத்து செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு கோயமுத்தூரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித் படத்திற்கு இவ்வாறு நடப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சம்பவம் அறிந்தவுடன் திரையரங்கிற்கு விரைந்து வந்த காட்டூர் காவல்துறையினர். பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
