ஜல்லிக்கட்டு விவகாரத்தில், நடிகர் கமலுக்கு பீட்டா இந்தியா அமைப்பின் சி.இ.ஓ. பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள பதிவில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விட்டுவிட்டு, அமெரிக்காவில் நடக்கும் புல் ரைடிங் விளையாட்டை தடை செய்ய, பீட்டா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ‘பீட்டா இந்தியா’ இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இதன் குறிக்கோள், இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பது மட்டுமே என்று பீட்டா இந்தியாவின் சி.இ.ஓ ., பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார் . அமெரிக்காவில் நடக்கும் மிருகவதைகளை தடுக்க, பீட்டா யு.எஸ்., அமைப்பு உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட விளையாட்டு, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.